Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வசூலில் மிரட்டும் 'லோகா' திரைப்படம்.. எத்தனை கோடி வசூல் தெரியுமா?

கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவான ‘லோகா’ திரைப்படம் ரூ.300+ கோடி வசூலைக் குவித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
12:57 PM Oct 14, 2025 IST | Web Editor
கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவான ‘லோகா’ திரைப்படம் ரூ.300+ கோடி வசூலைக் குவித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Advertisement

துல்கர் சல்மான் தயரிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி பெரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் 'லோகா'. டொமினிக் அருண் இயக்கிய இப்படத்தில் பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன்  ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் நடன இயக்குநர் சாண்டி வில்லத்தனத்தில் மிரட்டி இருந்தார். பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படத்தில், டொவினோ தாமஸ், துல்கர் சல்மான் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

Advertisement

தியேட்டர்களில் ஹிட் கொடுத்த லோகாபடத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் அண்மையில் வெளியானது. அதன்படி, இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகிற 20-ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் வசூல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, 'லோகா' திரைப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மலையாளத்தில் மட்டும் ரூ.110 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மலையாள சினிமாவில் அதிக வசூலைக் குவித்துள்ள திரைப்படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றுள்ளது.

Tags :
cinemaDulquer SalmaanKalyani PriyadarshanLokahmovieNaslenSandy
Advertisement
Next Article