Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தஞ்சையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய தவெகவினர்!

12:10 PM Dec 16, 2024 IST | Web Editor
Advertisement

தஞ்சையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 150க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் நிவாரண பொருட்களை வழங்கினர்.

Advertisement

ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் மற்றும் நிவாரணங்களை பல்வேறு தரப்பினர் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர், ஆவணியபுரத்தில் கீழத்தெருவில் வசிக்கும் 150க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, பிஸ்கெட் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி ஆகியவை
நிவாரணமாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தவெக வடக்கு ஒன்றிய தலைவர் ஜோதி லிங்கம் தலைமையில் தொகுதி பொறுப்பாளர் வீர விஜயகுமார் முன்னிலையில் திருபுவனம் பேரூர் பொறுப்பாளர் மதுசூதனன், ஆடுதுறை பேரூர் தலைவர் ரகுபதி மற்றும் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியம் சார்ந்த பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது குறித்து அரசுத்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்திவரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Tags :
FloodNews7Tamilnews7TamilUpdatesThanjavurtvk
Advertisement
Next Article