Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! -வானிலை ஆய்வு மையம் தகவல்

01:40 PM Nov 23, 2024 IST | Web Editor
Advertisement

வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

" தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தெற்கு அந்தமான், அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.

இதையும் படியுங்கள் : உள்ளாட்சி தினம் | தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கிராம சபை கூட்டம்!

அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் தமிழ்நாட்டில் வரும் 26 முதல் 29ம் தேதி வரை மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது"

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
bay of bengalHeavy rainLow-Pressure AreaMeteorological DepartmentNews7Tamilnews7TamilUpdatesTamilNadu
Advertisement
Next Article