“நாடாளுமன்ற தேர்தல் குறித்து வாட்ஸ்ஆப்பில் பரவும் செய்தி போலியானது” - தேர்தல் ஆணையம் விளக்கம்
ஏப்ரல் 16-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் என வாட்ஸ் ஆப்பில் பரவும் தகவல் போலியானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் இதுவரை தேர்தல் தேதிகள் எதுவும் அறிவிக்கவில்லை என்றும் முறையாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பும் டெல்லி யூனியன் பிரதேசத்தின் உதவி தலைமை தேர்தல் அதிகாரி மிசோ சமீபத்தில் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையை வைத்து, ஏப்ரல் 16ஆம் தேதி மக்களைவை தேர்தல் என சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் தகவல்கள் பரவின. இது உத்தேச தேதி என்றும் உத்தேச தேதியை நிர்ணயம் செய்வது வழக்கமான நடைமுறை என்றும் தேர்தல் ஆணையம் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த செய்தி மீண்டும் பரவி வரும் நிலையில் இரண்டாவது முறையாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.