#INDvsNZ | டெஸ்ட் போட்டியின் 4-ஆவது நாளில் மழை அடித்து ஆட்டம்!
இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இன்றைய ஆட்டம் மழையால் தற்காலிகமாக தடைபட்டுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் ஆவுட்டானது.
இதையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி சார்பில் ரச்சனி ரவீந்திரா சதமும், கான்வே 91 ரன்களையும் குவித்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 356 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதையும் படியுங்கள் : ரூ.1.7 கோடியை மீட்க உதவிய ‘பென்னி’ எனும் மோப்ப நாய்! குவியும் பாராட்டுகள்!
3-ஆவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 231 ரன்கள் எடுத்திருந்தது. 4-ஆவது நாளில் பேட்டிங் செய்த இந்திய அணி உணவு இடைவேளை வரை 344 ரன்களை எடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃபராஸ் கான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் சதத்தினை பதிவு செய்தார். ரிஷப் பந்தும் சிறப்பாக விளையாடி தனது 18-ஆவது அரைசதத்தினை பூர்த்தி செய்தார்.இந்நிலையில் மழை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.