மும்பை அணிக்கு எதிரான போட்டி - லக்னோ அணி அசத்தல் வெற்றி!
ஐபிஎல் டி20 கிரிக்கெட்டின் நேற்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டி லக்னோ அணி அசத்தல் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 17வது சீசன் போட்டி மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் லக்னோ அணி 9 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. அதில் 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளி பெற்றுள்ளது. மேலும் புள்ளி பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. அதேபோல 5 முறை சாம்பியனான மும்பை அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி உள்ள நிலையில் 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளி பெற்றுள்ளது.மேலும் புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது.
இதனைத் தொடர்ந்து முதலில் களமிறங்கிய வீரர்களான ரோஹித் சர்மா 4ரன்கள் எடுத்த நிலையில் மார்கஸ் ஸ்டொய்னிஸடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து இஷான் கிஷனுடன் கைகோர்த்த அடுத்தடுத்த வீரர்களான சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கேப்டன் ஹர்திக் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டானார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் அர்ஷின் குல்கர்னி களமிறங்கினர். வந்த வேகத்தில் குல்கர்னி டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து கே.எல்.ராகுலுடன் கைகோர்த்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் அதிரடியாக ஆடி ரன்களை குவித்து 65ரன்களில் ஆட்டமிழந்தார்.