Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘தி மேக்கிங் ஆஃப் ரவிச்சந்திர அஸ்வின்’ ஆவணத் தொடர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

‘தி மேக்கிங் ஆஃப் ரவிச்சந்திர அஸ்வின்’ ஆவணத் தொடர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
08:24 PM Jun 17, 2025 IST | Web Editor
‘தி மேக்கிங் ஆஃப் ரவிச்சந்திர அஸ்வின்’ ஆவணத் தொடர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியுடன் 15 ஆண்டுகள் பயணித்தவர் ரவிச்சந்திர அஸ்வின். சுழற் பந்து வீச்சாளரான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த  2010 ஆம் ஆண்டு அறிமுகமானார். அப்போது தொடங்கிய இவரின் பயணம் ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்டுகளும், டி20 சர்வதேச போட்டிகளில் 72 விக்கெட்டுகளும், டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளும் எடுத்து இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். இந்த பயணம்  கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியோடு முடிவுக்கு வந்தது.

Advertisement

இந்த நிலையில் இவரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில்  ‘தி மேக்கிங் ஆஃப் ரவிச்சந்திர அஸ்வின்’ என்ற பெயரில் உருவாகிய ஆவணத் தொடர் வருகிற ஜூலை 19 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியாகவுள்ளது.

இந்த ஆவணத் தொடருக்கான முன்னோட்ட வீடியோவை சென்னை அணி வெளியிட்டுள்ளது. அதில் ரவிச்சந்திர அஸ்வினின் குடும்பத்தினர் அவரின்  கிரிக்கெட் வாழ்க்கையை விவரிப்பதுபோலவும் அதற்கேற்ப பின்னணியில்  வீடியோ காட்சிகளும் அவ்வப்போது இடம்பெற்றுள்ளது.

Tags :
CskSpin BowlerThe Making Of Ravichandran Ashwin
Advertisement
Next Article