Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோலாகலமாக நிறைவடைந்தது மகா கும்பமேளா !

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா இனி 2169-ம் ஆண்டு தான் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
06:48 AM Feb 27, 2025 IST | Web Editor
Advertisement

உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. 45 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி நேற்றுடன் சிறப்பாக நிறைவடைந்தது. மகா கும்பமேளாவில் உலகம் முழுவதிலும் இருந்து முழுவதிலும் இருந்து இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

Advertisement

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா நிகழ்ச்சி தற்போது உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்றது. கோடிக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் பிரயாக்ராஜ் கும்பமேளா ரூ.2ஆயிரத்து 100 கோடியும் உத்தர பிரதேச மாநில அரசு ரூ.7ஆயிரத்து 500 கோடியும் ஒதுக்கிடு செய்து பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

பிரயாக்ராஜ் மாவட்டத்தில் இதற்காக ஒர் இடைக்கால நகரமே உருவாக்கப்பட்டது. கடந்த 45 நாட்களாக எந்தவித பெரிய அசம்பாவிதம் இன்றி மகா கும்பமேளா நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்று கடைசி நாள் என்பதால் அதிகாலை முதலே திரிவேணி சங்கமத்துக்கு சாதுக்களும், பக்தர்களும் அலை அலையாக வந்தனர்.

இந்நிலையில், கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 66 கோடியைத் தாண்டியுள்ளது என உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், கும்பமேளாவில் புனித நீராடுவோர் எண்ணிக்கை 45 கோடியை எட்டும் என எண்ணியிருந்த நிலையில், 66 கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

கும்பமேளாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு பிரபலங்களும் புனித நீராடினர். மேலும் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா இனி 2169-ம் ஆண்டு தான் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
CMMaha Kumbh MelaparticipatePeoplesPoliticiansupUttarpradesh
Advertisement
Next Article