Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருவண்ணாமலையில் இன்று மாலை ஏற்றப்படும் மகா தீபம் | ஏற்பாடுகள் தீவிரம்!

08:08 AM Nov 26, 2023 IST | Web Editor
Advertisement

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், இன்று மாலை முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற உள்ளது.

Advertisement

தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில், இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.

சிகர நிகழ்ச்சியான மகா தீபம் மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. மகா தீப நிகழ்ச்சிக்கு 7 ஆயிரத்து 500 பேரும், மலை மீது ஏற 2 ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மகா தீபத்தையொட்டி இன்று ஒருநாள் மட்டும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, செங்கம் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மலையேற அனுமதி சீட்டு வழங்க சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Next Article