கண்ணாடி, மரத்துகள்களை உண்ணும் சிறுமி!
வேல்ஸ் நாட்டில் மூன்று வயது சிறுமி ‘பிகா’ என்கிற நோயால் பாதிக்கப்பட்டு பஞ்சு, கண்ணாடி துகள்கள், மரத்துண்டுகள் போன்றவற்றை உண்ணும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
உலகெங்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணவு முறைகளை பின்பற்றுவர். ஆனால் இங்கு ஒரு சிறுமி முற்றிலும் வேறுபட்டு வீட்டில் உள்ள மர சாமான்கள், சோபா, கண்ணாடி போன்ற பொருட்களை உணவாக உட்கொள்கிறாள். இந்த விநோத உணவு முறைக்கு காரணம் என்ன என்பதை இங்கு காண்போம்.
வேல்ஸ் நாட்டின் பிளாக்வுட் நகரைச் சேர்ந்தவர் ஸ்டேசி ஏ'ஹெர்ன் (25). இவரின் மூன்று வயது மகள் வைண்டர் வீட்டில் உள்ள போட்டோ ஃபிரேம், கண்ணாடி துண்டுகள், புத்தம் புது சோபா போன்ற உணவு இல்லாத மற்ற பொருட்களை சாப்பிட்டு வருகிறார். இதுகுறித்து ஸ்டேசி கூறுவதாவது;
இதுபோன்ற உணவு அல்லாத மற்ற பொருட்களை சாப்பிடும் இந்த முறைக்கு பிகா சிண்ட்ரோம் (Pica syndrome) எனப் பெயர்.
எந்த விதமான ஊட்டச்சத்தும் இல்லாத, உணவு அல்லாத பிற பொருள்களைச் சாப்பிடுவதுதான் பிகா சிண்ட்ரோம். ஊட்டச்சத்து இல்லாத பொருள்கள் எனும்போது பேப்பர், மண், கற்கள், க்ரேயான்ஸ், துணி, ரப்பர் பேண்ட், பட்டன் இதுமாதிரியான பொருள்களும் அடங்கும். சிறிய வயதில் நம்மில் பலர் சிலேட் குச்சிகளைச் சாப்பிட்டிருப்போம். அதுவும் இதே பிரச்னைதான். இந்தப் பிரச்னை குறிப்பாக குழந்தைகளிடமும், கர்பிணிகளிடமும்தான் அதிகமாகக் காணப்படுகிறது.