“விஜய், நான் நேரில் பார்த்த லெஜண்ட்” - லியோ பட வெற்றி விழாவில் மிஷ்கின் புகழாரம்!
09:14 PM Nov 01, 2023 IST
|
Web Editor
Advertisement
“நான் நேரில் பார்த்த லெஜண்ட் விஜய்” என இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் பேசியுள்ளார்.
Advertisement
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 17 ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் ரூ. 540 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி நடைபோடுகிறது. இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் இன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
விழாவில் இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் பேசியதாவது:
“நான் நேரில் பார்த்த லெஜண்ட் விஜய். திரையுலகில் லெஜண்ட்ஸ் மைக்கேல் ஜாக்சன், புருஸ்லீதான். விஜய்யோடு இருப்பவர் வாழ்வார்களே தவிர வீழ மாட்டார்கள் என போஸ்டர் ஒட்டியவர் 100 ஆண்டு காலம் வாழவேண்டும். நடிகர் விஜய்க்காக எனது நெஞ்சை கூட அறுத்து கொடுப்பேன்” என லியோ’ பட வெற்றி விழாவில் இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் பேசியுள்ளார்.
Next Article