எதிர்கட்சியினர் ஐபோன்கள் உளவு பார்க்கப்படுவதாக குறுஞ்செய்தி வந்த விவகாரம்! விசாரணை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் உறுதி!!
எதிர்கட்சித்தலைவர்களின் ஆப்பிள் ஐபோன்கள் உளவு பார்க்கப்படுவதாக குறுஞ்செய்தி வந்து சர்ச்சையான நிலையில், உரிய விசாரணை நடத்தப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து ஆப்பிள் நிறுவன தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் மிகவும் புகழ் பெற்ற செல்போன் உற்பத்தி நிறுவனம் ஆப்பிள். ஐபோன், லேப்டாப், ஐபேட்ஸ் என கேட்ஜெட் சந்தைகளில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை ஆப்பிள் நிறுவனம் நடத்தி வருகிறது. ஆப்பிள் செல்போன்களை பொறுத்தவரை ஹைடெக் பாதுகாப்பு வசதியோடு, பிரைவேசியிலும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை கொண்டது ஆகும். இதனால், ஐபோன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். பெரும்பாலும் விஐபிக்கள், பிரபலங்கள் பலரும் ஆப்பிள் பிராண்ட்களையே பயன்படுத்தி வருவதை காணமுடியும்.
அரசு ஆதரவுடன் இயங்கும் ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்டு இருப்பதாக வந்த நோட்டிபிகேஷனுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. சில எச்சரிக்கை நோட்டிபிகேஷன்கள் தவறானவையாக இருக்க வாய்ப்பு உள்ளது. அரசு ஆதரவுடன் இயங்கும் ஹேக்கர்கள் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு இருப்பார்கள். எனவே, அதுபோன்ற தாக்குதல்களை அச்சுறுத்தல் சிக்னல்கள் மூலம் கண்டறிவது என்பது அடிக்கடி முழுமையற்றதாகவும் பொருத்தமற்றதாகவும் இருக்கும்" என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதில் அளித்துள்ளார். அதில், ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட அறிவிப்பு குறித்து சில எம்.பி.க்கள் மற்றும் சிலரிடமிருந்து வந்த தகவல்கள் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். இந்த பிரச்சினையில் ஆப்பிள் வழங்கும் பெரும்பாலான தகவல்கள் தெளிவற்றதாகஉள்ளது. அரசு அனைத்து குடிமக்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் உறுதிப்படுத்துவதில் உறுதியாக உள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்படும் எனவும், ஆப்பிள் தரப்பில் அரசின் விசாரணைக்கு முழு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.