Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழக அரசு அறிவித்த பரிசுத் தொகையை தான் படித்த கல்லூரிகளுக்கு அளித்த இஸ்ரோ விஞ்ஞானி -குவியும் பாராட்டு...

01:43 PM Nov 05, 2023 IST | Web Editor
Advertisement

தமிழக அரசு அறிவித்த பரிசுத் தொகை ரூ.25 லட்சத்தை இஸ்ரோ விஞ்ஞானி எம். சங்கரன் தான் பயின்ற அரசுக் கல்லூரிகளுக்கு பகிர்ந்து வழங்கியுள்ளார் .

Advertisement

திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1980 83 ஆம் கல்வியாண்டில் இளங்கலை பௌதிகவியல் பயின்றவர்.  இதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை பௌதிகவியல் பயின்றார். பின்னர், இந்திய விண்வெளி துறையில் இணைந்து பணிபுரியத் தொடங்கினார். தற்போது, பெங்களூரில் உள்ள இஸ்ரோ நிறுவனத்தின் யூ.ஆர். ராவ் செயற்கைக்கோள் மைய இயக்குநராக உள்ளார். இவர், சந்திரயான்-3 திட்டத்தின் தொழில்நுட்ப விஞ்ஞானியாகவும் பணிபுரிந்தவர்.

சந்திரயான்-3 திட்டம் வெற்றியைத் தொடர்ந்து அதில் பங்களிப்பு வழங்கிய தமிழகத்தைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவரையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு சார்பில் அழைத்து கௌரவப்படுத்தி பாராட்டியதுடன் தலா ரூ.25 லட்சம் பரிசுத் தொகையையும் அண்மையில் வழங்கினார். இதில், இஸ்ரோ விஞ்ஞானி எம். சங்கரனுக்கும் ரூ.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

சந்திரயான்-3 திட்டம் வெற்றியைத் தொடர்ந்து அதில் பங்களிப்பு வழங்கிய தமிழகத்தைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவரையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு சார்பில் அழைத்து கௌரவப்படுத்தி பாராட்டியதுடன் தலா ரூ.25 லட்சம் பரிசுத் தொகையையும் அண்மையில் வழங்கினார். இதில், இஸ்ரோ விஞ்ஞானி எம். சங்கரனுக்கும் ரூ.25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையை தான் பயின்ற அரசுக் கல்லூரிகளான திருச்சி தந்தை பெரியார் அரசுக் கல்லூரி, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் மாணவர் சங்கங்களுக்கு பகிர்ந்துளித்துள்ளார். இதுதொடர்பாக, இந்திய விண்வெளி துறையின் கூடுதல் செயலர் சந்தியா வேணுகோபால் சர்மா, தமிழக அரசின் உயர் கல்வித்துறை முதன்மைச் செயலருக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியுள்ளார்.

தந்தை பெரியார் அரசுக் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம், கடந்த அக்டோபர் மாதம் விஞ்ஞானி சங்கரனை கல்லூரிக்கு அழைத்து வந்து பாராட்டு தெரிவித்து கௌரவப்படுத்தியது. அப்போது, ரூ.1 லட்சத்தை முன்னாள் மாணவர் சங்கத்துக்கு வழங்கினார். தற்போது, தமிழக அரசின் பரிசுத் தொகையிலிருந்து ரூ.12.50 லட்சம் வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக, தந்தை பெரியார் அரசுக் கல்லூரியின் முதல்வர் பி.எஸ். விஜயலட்சுமி கூறுகையில், முன்னாள் மாணவரும், இஸ்ரோ விஞ்ஞானியுமான சங்கரன் அளித்த நன்கொடைகளை நிரந்தர வைப்பாகக் கொண்டு அவரது பெயரிலேயே ஆண்டுதோறும் நலத்திட்டங்களை செயல்படுத்துவதா, இருக்கை அமைத்து அதன் மூலம் திட்டங்களை செயல்படுத்துவதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதுதொடர்பாக, மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மாணவர் சங்கப் புரவலருமான திருச்சி என். சிவா மற்றும் சங்க நிர்வாகிகள், கல்லூரி நிர்வாகத்தினர் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கவுள்ளோம் என்றார் அவர்.

கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் விஞ்ஞானி சங்கரனுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Next Article