116 ரன்களில் தென்னாப்பிரிக்க அணியை சுருட்டிய இந்திய அணி!
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 116 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடந்த டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
அந்த வகையில் முதலில் டி20 தொடர் முடிந்தது, அதை சமன் செய்தது இந்தியா. இதன் தொடர்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்கியது. கே.எல்.ராகுல் தலைமையில் ஒருநாள் அணி களமிறங்குகிறது. கடைசியாக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்து இந்தியா.
இரு அணிகளும் இதுவரை 91 ஆட்டங்களில் நேருக்கு நேராக மோதியுள்ளன. இதில் தென்னாப்பிரிக்கா 50 ஆட்டங்களிலும் இந்தியா 38 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. 3 ஆட்டங்கள் முடிவில்லை. கடைசியாக நடைபெற்ற 5 ஆட்டங்களில் இந்தியா 3 முறையும், தென்னாப்பிரிக்கா 2 முறையும் வென்றுள்ளன.
முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. தென்னாப்பிரிக்கா அணி 9.2 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் சேர்த்திருந்தது. அடுத்து 7 ரன்கள் எடுப்பதற்கு முன்பே 3 விக்கெட்டுகளை இழந்தது. ஹென்றிக்ஸ், வெண்டர் டசன் மற்றும் முல்டர் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.