குடியரசு தலைவர் மாளிகை அரங்குகளின் பெயர் 'திடீர்' மாற்றம்!
குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள முக்கியமான அரங்குகள் பெயர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து அவ்வப்போது பல்வேறு இடங்களில் பெயர்களை மாற்றி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, டெல்லியின் புகழ்பெற்ற பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் ஸ்டேடியம், ஆகஸ்ட் 2019 இல் மறைந்த மறைந்த மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லியின் நினைவாக அருண் ஜெட்லி ஸ்டேடியம் என மறுபெயரிடப்பட்டது. இதே போன்று, உத்தரபிரதேசத்தின் அலகாபாத்தின் பெயர் பிரயாக்ராஜ் என மாற்றப்பட்டது. டெல்லியின் புகழ்பெற்ற ராஜபாதைக்கு ‘கர்தவ்யபத்’ என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்படி பல இடங்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருவது குறித்து, எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையின் இரண்டு முக்கியமான அரங்குகளில் பெயர்களை மாற்றியிருப்பது தொடர்பாக குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் தற்போது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.