பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி - உறுதி செய்தது ஐசிசி!
சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவதை ஐசிசி விடியோ வெளியிட்டு உறுதிசெய்துள்ளது.
9-வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரும் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தான் நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், தங்களது அனைத்து ஆட்டங்களையும் துபாயில் விளையாட விரும்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டவட்டமாக தெரிவித்தது.
பிசிசிஐ தனது நிலைப்பாட்டை ஐசிசியிடம் தெரிவித்து இருந்தது. இந்தியா மோதும் ஆட்டங்களை மட்டும் துபாயில் நடத்த வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருந்தது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டாலோ அல்லது ஒத்திவைக்கப்பட்டாலோ பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.548 கோடி இழப்பு ஏற்படும் என்று தகவல் வெளியானது.
இதையும் படியுங்கள் : விடுதலை 2 படத்தின் ‘தினம் தினமும்’ பாடல் வெளியீடு தேதி அறிவிப்பு!
மேலுஇந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தான் நடைபெறும் என்பதை குறிக்கும் விதமாக ஐசிசி புதிய விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளது. கடைசியாக 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.