Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தீரன் சின்னமலையின் வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்!

சதியால் வீழ்த்தப்பட்ட வீரத்தின் விளைநிலம் தீரன் சின்னமலை நினைவை போற்றுவோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10:47 AM Aug 03, 2025 IST | Web Editor
சதியால் வீழ்த்தப்பட்ட வீரத்தின் விளைநிலம் தீரன் சின்னமலை நினைவை போற்றுவோம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Advertisement

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "வெள்ளையர்களுக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தை முதன்முதலில் முன்னெடுத்த சிலரில் ஒருவரும், ஆங்கிலேயர்களை அஞ்ச வைத்த வீரத்திற்கும், தீரத்திற்கும் சொந்தக்காரரான கொங்கு நாட்டு மன்னர் தீரன் சின்னமலையின் 221-ஆம் நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அவருக்கு வீர வணக்கத்தை செலுத்துவோம்; மரியாதையை செலுத்துவோம்.

Advertisement

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் எனும் சிற்றூரில் 1756 ஆம் ஆண்டில் பிறந்த தீரன் சின்னமலை, இளம் வயதிலேயே ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு எதிராக போராடத் தொடங்கினார். இன்றைய கேரளத்திலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்று சேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். மைசூர் ஸ்ரீரங்கப் பட்டணத்தை ஆட்சி செய்து வந்த திப்பு சுல்தானுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையில் நடந்த போரில் திப்பு சுல்தான் வெற்றி பெறுவதற்கு பெருமளவில் உதவிகளை செய்தார்.

1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்பதை அறிந்த ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று தூக்கிலிட்டனர். ஒரு தீரன் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட நாள் இன்று.

தீரன் சின்னமலையில் வீர வரலாறு மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். தீரன் சின்னமலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் பாடப்புத்தகத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம்.

Tags :
Anbumani RamadossMemorialDayPMKTextbookTheeran Chinnamalai
Advertisement
Next Article