Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“பேரூராட்சிகளின் பிரமாண்டமான வளர்ச்சி!” - தமிழ்நாடு அரசு அறிக்கை!

10:44 AM Jul 21, 2024 IST | Web Editor
Advertisement

மக்களுக்குத் தேவைப்படும் வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் பேரூராட்சிகள் துறையில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“சிறிய மற்றும் நடுத்தர நகரங்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பணி செய்வது பெரிய நகரங்களின் வளர்ச்சிக்கும், செழிப்புக்கும் உறுதுணையாக இருக்கும். எனவே, பேரூராட்சிகளின் வளர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பல பேரூராட்சிகள், கோயில்கள் மற்றும் பாரம்பரிய இடங்களைக் கொண்ட சுற்றுலா மையங்களாகப் பல ஆண்டுகளாக விளங்கி வருகின்றன.

மொத்த பரப்பளவு 5,983.50 சதுர கி.மீ. கொண்ட 490 பேரூராட்சிகளின் தற்போதைய மக்கள் தொகை 78,87,523 ஆகும். பேரூராட்சிகள் நிர்வாகம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முனைப்புடனும் செயல்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் நகர்ப்புற மக்கள் தொகைக்கு இந்த முயற்சிகள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

மக்களுக்குத் தேவைப்படும் வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் பேரூராட்சிகள் துறையில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் படுகின்றன.

நபார்டு திட்டத்தின்கீழ்:

நபார்டு திட்டத்தின்கீழ், 2021 முதல் கடந்த மூன்றாண்டுகளில் 602 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 515 சாலைப் பணிகள் நிறைவேற்றப் பட்டுள்ளன: 11 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாடு நகர்ப்புறச் சாலை கட்டமைப்புத் திட்டத்தின்கீழ்:

தமிழ்நாடு நகர்ப்புறச் சாலை கட்டமைப்புத் திட்டத்தின்கீழ், ரூ.812 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் 1583 கிமீ நீளத்திற்கு 1178 சாலைப் பணிகள் நடைபெற்றுள்ளன.

மாநில நகர்ப்புறச் சாலை மேம்பாட்டு நிதியின்கீழ்

ரூ.10.469 கோடி மதிப்பீட்டில் 137.57 கிமீ நீளத்திற்கு மண்சாலைகளைத் தார்ச் சாலைகளாக, சிமெண்ட் கான்கிரீட் மற்றும் பேவர் பிளாக் சாலைகளாக மேம்படுத்தும் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மூலதன மானிய நிதி திட்டத்தின்கீழ்:

மூலதன மானிய நிதி திட்டத்தின்கீழ், 569.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 355 பணிகள் நிறைவேற்றப் பட்டுள்ளன. இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதி திட்டத்தின்கீழ் 210.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 668 பணிகள் நடைபெற்றுள்ளன.

15வது நிதி ஆணைய மானியத்தின்கீழ்:

15வது நிதி ஆணைய மானியத்தின்கீழ், 466.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3009 பணிகள் நடைபெற்றுள்ளன. தேசிய சுகாதார மையப் பணிகள் திட்டத்தின்கீழ் 76.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 141 பணிகள் நிறைவேற்றப் பட்டுள்ளன.

தெருக்களில் சுகாதார உணவு மையங்கள்:

மாமல்லபுரம், வேளாங்கண்ணி ஆகிய 2 பேரூராட்சிகளின் தெருக்களிலும் ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவு மையங்கள் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படுகின்றன.

சாலையோர வியாபாரிகளுக்குத் தள்ளுவண்டிகள்:

தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின்கீழ் நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேரூராட்சியில் 228 சாலையோர வியாபாரிகளுக்கு 1.88 கோடி ரூபாயில் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.

வீடற்றவர்களுக்குத் தங்குமிடங்கள்:

நகர்ப்புற வீடற்றவர்களுக்குத் தங்குமிடம் வேளாங்கண்ணியில் 5.76.10 லட்சம் மதிப்பீட்டில் ஒரு திட்டத்தின்கீழ் தங்குமிடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், 2.97 கோடியில் கருமாண்டி செல்லி பாளையம். மாமல்லபுரம், அவிநாசி ஆகிய இடங்களில் மூன்று தங்குமிடங்கள் கட்ட அனுமதிக்கப்பட்டுப் பணிகள் நடைபெறுகின்றன.

தெருவோர வியாபாரிகள் நலத் திட்டம்:

தெருவோர வியாபாரிகள் நலத் திட்டத்தின்கீழ், 46,990 சாலையோர வியாபாரிகளுக்கு முதல் தவனையாக ரூ.10,000 வீதமும், 2வது தவனையாக 14,376 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.20,000 வீதமும், 3வது தவனையாக 1,807 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.50,000 வீதமும் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்:

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மூன்றாண்டுகளில் 1,112 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,509 பணிகள் நடைபெற்றுள்ளன. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சாலைகள் அமைத்தல் நீர்நிலைகள் புனரமைத்தல், பூங்காக்கள் அமைத்தல் உட்பட 1199 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்:

தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் 63.50கோடி ரூபாய் மதிப்பீட்டில் 77 பேரூராட்சிகளில் 192 பணிகள் நிறைவேற்றப் பட்டுள்ளன.

அம்ரூத் 2.0:

அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ் பேரூராட்சிகளில் 2,391 .72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் வசதிகள் பூங்கா மேம்பாடு, நீர்நிலைகள் புனரமைத்தல் முதலிய மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன.

பேருந்து நிலையங்கள் - சந்தைகள்:

490 பேரூராட்சிகளில் 203 பேருந்து நிலையங்கள் அமைந்துள்ளன. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் 91.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 66 புதிய பேருந்து நிலையப் பணிகளும், பேருந்து நிலைய மேம்பாட்டுப் நிறைவேற்றப்படுகின்றன. பணிகளும் எடுத்துக்கொள்ளப்பட்டு 110 கோடியே 32 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 51 சந்தை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

எரிவாயு / மின் தகன கூடங்கள்:

பேரூராட்சிப் பகுதிகளில், சுற்றுச்சூழுலைப் பாதுகாக்கவும். பாரம்பரிய எரிபொருள் முறையான மர எரிப்பு முறையைப் படிப்படியாக எரிவாயு தகனங்கள் மூலம் மாற்றவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 25 நவீன மின் தகன கூடங்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. கடந்த மூன்றாண்டுகளில் புதியதாக 99 எரிவாயு மின்தகன கூடங்கள் 147 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட ஆணைகள் இடப்பட்டன. அவற்றுள் 41 எரிவாயு மின் தகன கூடங்கள் அமைக்கப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன. எஞ்சியவை முன்னேற்றத்தில் உள்ளன.

பாதாள சாக்கடை திட்டம்:

திமுக ஆட்சியில் 12 பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றுள் வேளாங்கண்ணி, ஒரத்தநாடு, வல்லம், மாமல்லபுரம், எஸ்.கண்ணணூர், பெருந்துறை, பழனிசெட்டிபட்டி, திருமழிசை, மண்ணச்சநல்லூர், மேலச்சொக்கநாதபுரம் ஆகிய 10 பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மீதம் உள்ள திருப்பெரும்புதூர், திருப்போரூர் பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் முன்னேற்றத்தில் உள்ளன. தற்போது, இப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடை வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

பேரூராட்சிப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மேம்பாடு:

காலநிலை மாற்றம் என்பது இன்று உலக அளவில் பேசப்படும் பொருளாகிவிட்டது என்பதோடு, அதன் தாக்கம் அனைத்து பிரிவினரையும் பாதித்துள்ளது. எனவே, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மாற்றங்களைக் கவனத்தில் கொண்டும். சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் பேரூராட்சிகளில் மரங்கள் வளர்த்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.

மா, பலா, கொய்யா மற்றும் பொதுமக்களுக்குப் பயன்படும் பாரம்பரிய மரங்கள் நடவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறது. பேரூராட்சிப் பகுதிகளில் தேக்கு, வேங்கை, வேம்பு போன்ற மதிப்புமிக்க மரங்களை நடவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளின் கரைகளைப் பலப்படுத்திடக் கரைகளைச் சுற்றிலும் பனை மரங்களை நடவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறது. இதுவரை 490 பேரூராட்சிகளில் 4,09,413 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

தெருவிளக்குகள்:

439 பேரூராட்சிகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள 2,66,953 தெருவிளக்குகளை 155.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எல்.இ.டி விளக்குகளாக மாற்றி அமைத்திடும் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.

தூய்மை இந்தியா 2.0 திட்டம்:

தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின்கீழ் அனைத்துப் பேரூராட்சிகளுக்கும் மாநில அளவிலான தொழிற்நுட்பக் குழுவால் நகரச் சுகாதாரத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அதன்படி, 331 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 41,858 தனி நபர் கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 190 இடங்களில் சமுதாயக் கழிப்பிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 185 கழிவு நீர் அகற்று வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

நகர்ப்புர உள்ளாட்சிகளுக்கான சுற்றுலா மேம்பாட்டு நிதி:

நகர்ப்புர உள்ளாட்சிப் பகுதிகளில் சுற்றுலா மேம்பாட்டு நிதியின்கீழ் 12 பேரூராட்சிகளுக்கு 6 கோடி ரூபாய் நிலையான மானியமும் 27 பேரூராட்சிகளுக்கு 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் வேறுபட்ட மானியமும் ஆக ஒதுக்கீடு செய்யப்பட்டு சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன.

அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்:

அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 51 கோடியே 81 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 37 மாவட்டங்களில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பழங்குடியினர் நலத் திட்டம்:

பழங்குடியினர் நலத் திட்டத்தின்கீழ் கடலூர், திண்டுக்கல், நீலகிரி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் மக்களுக்கு 2 கோடியே 3 இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் குடிநீர் வசதி. சோலார் விளக்கு, தெரு விளக்கு ஆகிய 89 வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

கருணை அடிப்படையில் நியமனம்:

கருணை அடிப்படையில் நியமன திட்டத்தின்கீழ் பேரூராட்சிகளில் பணிபுரிந்த காலத்தில் இயற்கை எய்திய 88 அரசுப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பேரூராட்சி விருதுகள்:

பேரூராட்சிப் பகுதிகளில் வாழும் மக்கள் பயன் அடையும் வகையில் திட்டப்பணிகளை மிகச் சிறப்பாகச் செய்து நிறைவேற்றியுள்ள கருங்குழி, கன்னியாகுமரி, சோழ வந்தான். விக்கிரவாண்டி, ஆலங்குடி, வீரக்கல்புதூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு முதலமைச்சர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டு மண்டல அளவிலான விருது பேரூராட்சிப் பணிகளை மிகச் சிறப்பாக நிறைவேற்றிய கீழ்வேளூர் பேரூராட்சிக்கு வழங்கி பாராட்டப்பட்டுள்ளன.

இப்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் தொகுதியில் விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மாணவர், மகளிர், முதியோர், மாற்றுத் திறனாளிகள் என அனைத்துப் பிரிவினரும் பயனடையும் முத்திரைத் திட்டங்கள் பலவற்றை மிகச் சிறப்பாக உருவாக்கி நிறைவேற்றி வருவது போல் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என ஆட்சி நிர்வாக அமைப்புகளின் பணிகளையும் பாராட்டத்தக்க முறையில் நிறைவேற்றி வருகின்றார். இந்த மகத்தான பணிகளின் காரணமாகவே உள்ளாட்சிகள் நிர்வாகத்தில் தமிழ்நாடு இந்தியாவில் சிறந்து விளங்குகிறது”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
AchievementsDMKmunicipalityNews7Tamilnews7TamilUpdatesTN AssemblyTN Govt
Advertisement
Next Article