Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சாலையில் தாறுமறாக ஓடிய அரசு பேருந்து... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்...

04:58 PM Feb 03, 2024 IST | Web Editor
Advertisement

கன்னியாகுமரி அருகே 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்தில் பிரேக் பழுதாகியது.  இந்த நிலையில் கற்கள், பழைய டயர் போன்ற பொருட்களை வீசி பொதுமக்கள் பேருந்தை நிறுத்தினர். 

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மேல் மிடாலம் பகுதியில் இருந்து நாகர்கோவில் நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து ஒன்றில் சுமார் 30 பயணிகள் பயணம் செய்தனர்.  அந்த பேருந்து கருமாவினை பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது,  சில பயணிகள் இறங்கும் இடம் வந்ததால் பேருந்தை நிறுத்தும்படி கூறினார்கள்.  ஓட்டுநர் பேருந்தை நிறுத்த முயன்றபோது,  'பிரேக்' பழுதாகி உள்ளதை உணர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்த பலமுறை முயற்சி செய்தும்,  அவரால் நிறுத்த முடியவில்லை.  பேருந்து நிற்காமல் சென்ற நிலையில் பயணிகள் கூச்சலிட்டனர்.  இதை பார்த்த பொதுமக்கள் பேருந்தின் முன் கற்கள் மற்றும் டயரை போட்டு நிறுத்த முயன்றனர்.

இதையும் படியுங்கள்:  “சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து தோற்றவர்கள் பட்டியலில் விஜய்-யும் சேருவார்!” – அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன்

ஆனால் பேருந்து அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்றது.   இந்த நிலையில் மத்திகோடு புளியமூடு சந்திப்பு பகுதியில் பொதுமக்கள் கற்களை போட்டு பேருந்தை நிறுத்தினர்.  இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.  அதன் பின்னரே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Tags :
BreakeBreake FailureBUSgovt busKanyakumariKarungalpassengerspublic
Advertisement
Next Article