Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“The Goat" படத்தின் புரமோஷன் பணிகள் - படக்குழு தீவிரம்!

06:03 PM Aug 27, 2024 IST | Web Editor
Advertisement

தி கோட் திரைப்படம் செப். 5-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக படக்குழு ஈடுபட்டுள்ளது.

Advertisement

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.

மேலும் இது விஜய் அரசியலுக்கு வந்தபிறகு வெளியாகும் முதல் படமாகும். ஏற்கனவே இப்படத்திலிருந்து மூன்று பாடல்கள் வெளியான நிலையில் இப்படத்தின் டிரைய்லருக்காக ரசிகர்கள் ஆவலாக காத்துகொண்டு இருந்தனர். தொடர்ந்து, தி கோட் திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 17 ம் தேதி வெளியானது. தொடர்ந்து, இந்த ட்ரெயிலர் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது. மேலும், ட்ரெய்லரை விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

தொடர்ந்து சமீபத்தில், கோட் புரமோஷனில் இயக்குநர் வெங்கட் பிரபு கலந்துகொண்டு பேசியபோது, “கோட் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மேல் இருக்கும். என் திரைவாழ்வில் என்னுடைய பெரிய படமும் இதுதான். நிச்சயம் ரசிகர்களைக் கவரும்” என தெரிவித்தார்.

இந்நிலையில், படக்குழுவினர் வருகிற ஆக. 29-ம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்திக்கின்றனர். அதன்பின், யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல்கள் கொடுக்க உள்ளனர். செப். 5-ம் தேதி “தி கோட்” திரைப்படம் உலகளவில் வெளியாகும் என்பதால் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags :
AGSNews7Tamilnews7TamilUpdatesPromotionthalapathy vijayThe GoatThe Greatest of All Timevenkat prabhuvijay
Advertisement
Next Article