தென்மாவட்டங்களை உருக்குலைத்த வெள்ளம் | நியூஸ்7 தமிழ் அன்பு பாலம் மூலம் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்!
தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் திரட்டப்பட்ட நிவாரண பொருட்கள் வாகனம் மூலம் அனுப்பப்பட்டது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை, வெள்ளம் காரணமாக லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதையடுத்து, தென் தமிழக மக்களுக்கு உதவி செய்ய விரும்புவோர், நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் அத்யாவசிய பொருட்களை வழங்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நியூஸ் 7 தமிழின் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை அலுவலகங்களில் நிவாரணப்பொருட்களை வழங்கலாம் என்றும், அவற்றை பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை அன்பு பாலம் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏராளமானோர் ஆர்வத்துடன் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
நிவாராண உதவி வழங்க உதவிய நல் உள்ளங்கள்...
இதில் முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட 2 டன் அரிசி மற்றும் பிஸ்கெட்டுகள், பால் பவுடர், தண்ணீர் பாட்டில்கள், போர்வைகள், சமையல் எண்ணெய், ரவை, மைதா, ஆடைகள் போன்ற 3 டன் பொருட்கள் சென்னை நியூஸ் 7 தமிழ் தலைமை அலுவலகத்திலிருந்து வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
எஸ்டிபிஐ கட்சியினர் ஏற்பாடு செய்த வாகனம் மூலம் இந்த பொருட்கள் நெல்லை கொண்டு செல்லப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.