Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முகாமில் தங்கியிருந்த மக்களை அடித்து சென்ற வெள்ளம்... நியூஸ்7 தமிழ் நேரடி தகவல்!

03:03 PM Jul 31, 2024 IST | Web Editor
Advertisement

கேரளாவில் சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், பள்ளியில் முகாம் அமைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்ட மக்களை வெள்ளநீர் அடித்து செல்லும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பருவமழை பெய்து வந்தது. இந்த பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் காவிரி ஆறு மற்றும் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் நேற்று முன்தினம் வயநாட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் 1000த்திற்கும் மேற்பட்டோர் சிக்கிய நிலையில், தற்போது மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பலர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை வெள்ள நீர் அடித்து சென்ற கோர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சூரல் மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் தப்பிய பல மக்கள் அருகிலுள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அவர்கள் அடித்து செல்லப்பட்டுள்ளனர். பள்ளிகள் முழுவதும் சேரும் சகதியுமாக இருக்கும் நிலையில், உடல்கள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

Tags :
#PrayForWayanadKeralalandslideRescueWayanadWayanad Landslides
Advertisement
Next Article