Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெளியானது 'லால் சலாம்' படத்தின் முதல் பாடல்!

08:55 PM Dec 18, 2023 IST | Web Editor
Advertisement

லால் சலாம் படத்தின் முதல் பாடலான "தேர் திருவிழா" எனும் பாடல் வெளியானது.

Advertisement

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,  கடந்த 2012-ம் ஆண்டு நடிகர்  தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘3’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.  இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 2015-ம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த  ”வை ராஜா வை” என்ற படத்தையும்  இயக்கினார்.

இந்த நிலையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம்.  விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.  இத்திரைப்படத்தில்  நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கின்ற சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: அயலான் திரைப்படத்தின் 2-வது சிங்கிள் எப்போது?

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுள்ள  இந்தப் படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நடித்துள்ளார்.  லால் சலாம் 2024-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த நிலையில் லால் சலாம் படத்தின் "தேர் திருவிழா" என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது.  இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags :
Aishwarya rajinikanthar rahmanLal salaamLyca Productionsmovie updatesnews7 tamilNews7 Tamil UpdatesRajinikanthVikranthVishnu Vishal
Advertisement
Next Article