Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘How Is It Possible Bro?’ – வெளியானது ‘2K லவ் ஸ்டோரி’படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

06:54 AM Nov 21, 2024 IST | Web Editor
Advertisement

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘2K லவ் ஸ்டோரி’படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.

Advertisement

சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில், நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக உருவாகும் திரைப்படம் ‘2K லவ் ஸ்டோரி’. 2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. வெட்டிங் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகிறது.

அறிமுக நடிகர்கள், ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜான் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, சிங்கமுத்து, ஜிபி முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்கள் : புரோ கபடி லீக் போட்டி | யு மும்பை அணியை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி!

இந்த திரைப்படம் வருகின்ற டிசம்பர் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது. இப்பாடலை பின்னணி பாடகர் தெருக்குரல் அறிவு பாடியுள்ளார்.

Tags :
2KLoveStoryBalaSaravananDImmanNews7Tamilnews7TamilUpdatesSuseenthiran
Advertisement
Next Article