வெளியானது 'தளபதி 69' படத்தின் FIRST LOOK போஸ்டர் !
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். கடந்தாண்டு விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதனால் திரைத்துறையில் இருந்து வெளியேறப்போவதாகவும், கடைசி படமாக "தளபதி 69" திரைக்கு வரும் என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் எச். வினோத் கூட்டணியில் உருவாகும் "தளபதி 69" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு `ஜன நாயகன்' என்ற தலைப்பை வைத்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த படம் அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
முன்னதாக நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் பலமுறை வாகனத்தின் மீது நின்றபடி செல்ஃபி எடுத்துள்ளார். அந்த வகையில் தனது அடுத்த படத்தின் முதல் தோற்றத்திலேயே தன் நிஜ வாழ்க்கை சம்பவத்தை ரீகிரியேட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.