Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெளியானது பிரபுதேவா நடிக்கும் 'சிங்காநல்லூர் சிக்னல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

01:33 PM Jul 01, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் பிரபுதேவா நடிக்கும் 'சிங்காநல்லூர் சிக்னல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Advertisement

நடன இயக்குநராக இருந்து நடிகர், இயக்குநர் என பாலிவுட் வரை வெற்றிகரமாக வலம் வருபவர் பிரபு தேவா. தமிழில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பொய்க்கால் குதிரை, பாகீரா ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மலையாள இயக்குநர் எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘பேட்ட ராப்’.

இதனைத் தொடர்ந்து, நாயகனாக  ‘மூன் வாக்’ திரைப்படத்திலும் பிரபுதேவா நடிக்கிறார். இந்நிலையில், பிரபுதேவா தமிழில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையே, நடிகர் விஜய்யின் 'கோட்' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள் : நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

இந்நிலையில், பிரபுதேவாவின் புதிய திரைப்படம் 'சிங்காநல்லூர் சிக்னல்'எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜே.எம்.ராஜா இயக்கும் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த திரைப்படம் குறித்த அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் மூலம் இந்த திரைப்படத்தில் போக்குவரத்து காவலர் கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடிக்கவுள்ளது தெரியவந்துள்ளது.

Tags :
actorFirst Lookfirst look postermoviePrabhu devaSinganallur Signal
Advertisement
Next Article