Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பரிதாபங்கள் புகழ் கோபி சுதாகரின் “ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

யூடியூப் புகழ் கோபி சுதாகரின் பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
01:40 PM Aug 04, 2025 IST | Web Editor
யூடியூப் புகழ் கோபி சுதாகரின் பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
Advertisement

யூடியூபில் பரிதபங்கள் என்னு சேனல் மூலம் புகழ் பெற்றவர்கள் கோபி மற்றும் சுதாகர். இவர்கள் யூடியூபில் வெளியிடும் நகைச்சுவை வீடியோக்கள் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், பரிதாபங்கள் புரடக்சன்ஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்,படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த படத்தில், பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Advertisement

ஃபர்ஸ்ட் லுக்கில் சார்லி சாப்ளின் மேக்கப்பில் கோபி அமர்ந்திருக்க, அருகே வாய் கட்டப்பட்ட நிலையில் இன்னொரு சார்லி சாப்ளினாக நியாய தராசு ஏந்தி நிற்கிறார் சுதாகர். தராசில் ஒரு புறம் காந்தியின் புகழ் பெற்ற மேற்கோளை பிரதிபலிக்கும், கண்களை மூடிய குரங்கு பொம்மையும், காதை மூடிய குரங்கு பொம்மையும் இருக்க, இன்னொரு புறம் வாயை மூடிய குரங்கு உள்ளது. கோபியின் கையில், அரிச்சந்திரன் எழுதிய பொய் சொல்வது எப்படி என்கிற புத்தகம் உள்ளது. பல நுணுக்கமான விசயங்களுடன், பார்த்தவுடன் ஆச்சரியப்பட வைக்கும், யோசிக்க வைக்கும், புதுமையான இந்த ஃபர்ஸ்ட் லுக், திரை விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. மேலும் இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது.

உண்மை தான் என்றும் நிலையானது, வாய்மையே எப்போதும் வெல்லும், இந்த கருத்தினை மையமாக வைத்து, வழக்கமான கமர்ஷியல் படங்கள் போல அல்லாமல், ஒரு நடுத்தர குடும்ப வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. நம் வாழ்வோடு எளிதில் தொடர்புபடுத்தி கொள்ளும் வகையான இந்தக் கதையில், ஃபேண்டஸி கலந்து எண்டர்டெயினருடன், முழுக்க எமோஷனல் டிராமாவாக, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இரு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை சொல்லும் இக்கதையில், பரிதாபங்கள் புகழ் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் VTV கணேஷ், வின்சு சாம், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம், பிரசன்னா, யுவராஜ் கணேசன், ஹரிதா, கௌதம், பாலகுமாரன், குகன், சாத்விக், ஆழியா, பெனடிக்ட் & பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சக்திவேல், K B ஶ்ரீ கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படத்திற்கு JC ஜோ இசையமைத்துள்ளார். மேலும் அருண் கௌதம் பின்னணி இசை மற்றும் கூடுதல் பாடல்கள் உள்ளிட்ட பணிகளை செய்துள்ளார்.

இப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.“ஓ காட் பியூட்டிஃபுல்” பட ஃபர்ஸ்ட் லுக்கிற்கே இத்தனை உழைத்திருக்கும் படக்குழு படத்தில் இன்னும் என்னென்ன ஆச்சரியங்கள் வைத்துதிருக்கிறன்றனர் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, படத்தின் டீசரையும், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரத்தின் ஒருவரின் குரலில் ஃபர்ஸ்ட் சிங்கிளையும் விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

Tags :
cinimanewsgopisudhakaromygodbeautifullfirstlookparidhabangal
Advertisement
Next Article