Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விஜயகாந்த் இல்லாத முதல் தேர்தல் - யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது தேமுதிக?

12:50 PM Feb 02, 2024 IST | Jeni
Advertisement

கட்சியின் தலைவர் விஜயகாந்த் இல்லாமல் தனது முதல் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், கூட்டணி தொடர்பான ஆலோசனையில் தேமுதிக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

Advertisement

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும், ஏப்ரல் மாதத்தில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டன. இதனால் நாடு முழுவதும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த முறை தமிழகத்தில் 4 முனைப் போட்டி இருக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. திமுக, அதிமுக, நாதக, பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவை மட்டுமல்லாமல், பாமக, அமமுக உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சிகளும், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு கட்சிகள் தேர்தலுக்கான கூட்டணி குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தேமுதிகவும், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

கள்ளக்குறிச்சி, விருதுநகர் உட்பட குறைந்தது 4 மக்களவைத் தொகுதிகளும், 1 மாநிலங்களவை பதவியும் கேட்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லாத முதல் தேர்தல் என்பதால், சரிவில் இருந்து சமாளித்து மாநிலக் கட்சி அங்கீகாரத்தை பெற வலுவான கூட்டணியில் இணைய கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : கைது நடவடிக்கைக்கு எதிராக ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கு - விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக, வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அல்லது பாஜக கூட்டணியில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றபின் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
ALLIANCEDMDKElection2024ParliamentElectionPremalathaVijayakanthVijayakanth
Advertisement
Next Article