Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Thangalaan படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

06:53 PM Aug 16, 2024 IST | Web Editor
Advertisement

விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இத்திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் மற்றும் டேனியல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 1900 களில் கோலார் கோல்ட் ஃபீல்ட்டில் {கே.ஜி.எஃப்} தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமுதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றி பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது.

இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பா.ரஞ்சித்துடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுவது இதுவே முதல் முறை.  இந்த நிலையில்,  சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘தங்கலான்’ திரைப்படம் நேற்று (ஆகஸ்ட் 15) திரையரங்குகளில் வெளியானது. மேலும், தங்கலான் படத்தின் பாடல்கள் மினுக்கி, தங்கலானே ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையும் படியுங்கள் :#Kolkata மருத்துவர் கொலை: அரசு வழங்கிய இழப்பீடை மறுத்த தந்தை!

இந்நிலையில், ‘தங்கலான்’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் முதல் நாளில் இந்திய அளவில் ரூ.26.44 கோடி வசூலித்ததாக படக்குழு தெரிவித்துள்ளனர். இன்னும், எந்தளவுக்கு வசூல் வேட்டையை தங்கலான் ஆடுகிறான் என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

Tags :
#ActorVikram#gvprakashfansPaRanjiththangalaanvikramVikramFans
Advertisement
Next Article