Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

செப்டம்பரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு!

01:50 PM Jul 28, 2024 IST | Web Editor
Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பர் மாதம் சேலம் மாவட்டத்தில் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Advertisement

நடிகர் விஜய் நடித்துள்ள GOAT திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் செப்டம்பர் மாதமே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை நடத்த கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.

2026 சட்டமன்ற தேர்தல்தான் தன் இலக்கு எனக்கூறிய விஜய், தனது முதல் மாநாடை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்காக கட்சியின் நிர்வாகிகளுடன் தலைமைச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.  மாநாட்டில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, புதுச்சேரி, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 10 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்க முன்பதிவும் செய்யப்பட்டுள்ளது. முதல் மாநாடு திருச்சி அல்லது மதுரை போன்ற இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்த பகுதிகளில் முறையான அனுமதி கிடைக்கவில்லை. அதனால்,மாநாடு சேலம் மாவட்டம், நாலிகால்பட்டி பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்திற்கு தற்போது அனுமதி கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த பகுதியில் முன்கூட்டியே அதிமுக, திமுக, தேமுதிக போன்ற பல்வேறு அரசியல் கட்சிகள் மாநாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் தாராளமாக 10 லட்சம் பேர் பங்கேற்க கூடிய இடமாக இருப்பதால் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாடுக்கு முன்னதாகவே கட்சியின் கொடியினை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags :
Bussy AnandConferencemeetingSalemtvkTVK Vijayvijay
Advertisement
Next Article