Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கூகுள் மீதான ஐரேப்பிய யூனியனின் அபராதத்தை ரத்து செய்யவேண்டும். இல்லையென்றால்..? - டிரம்ப் எச்சரிக்கை!

கூகுள் மீதான  ஐரேப்பிய யூனியனின் வரி நியாயமற்றது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
10:10 PM Sep 06, 2025 IST | Web Editor
கூகுள் மீதான  ஐரேப்பிய யூனியனின் வரி நியாயமற்றது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Advertisement

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இணைய தேடு பொறி நிறுவனமாக ‘கூகுள்’ உலகின் முண்ணனி நிறுவனமாக உள்ளது. உலகில் அதிகமான பயனர்களால் பயன்படுத்தப்படும் செயலி கூகுள் ஆகும்.  இதற்கிடையில், விளம்பர தொழில்நுட்ப சந்தைக்கு பயனர்களின் தரவுகளை ‘கூகுள்’ நிறுவனம் தவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் 2.95 யூரோ அபராதம் விதித்தது.

Advertisement

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கூகுள் மீதான  ஐரேப்பிய யூனியனின் வரி நியாயமற்றது என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்ரூ சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”ஐரோப்பா இன்று மற்றொரு பெரிய அமெரிக்க நிறுவனமான கூகிள் 3.5 பில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது. இது மிகவும் நியாயமற்றது. இது போன்ற பாரபட்சமான நடவடிக்கைகளை நிற்க எனது நிர்வாகம் அனுமதிக்காது. அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக விதிக்கப்படும் நியாயமற்ற அபராதங்களை ரத்து செய்யவில்லை என்றால், கடுமையான பதில் நடவடிக்கைகளை எடுப்பேன்” என எச்சரித்துள்ளார்.

Tags :
eugooglelatestNewsTrump
Advertisement
Next Article