3 தேசிய விருதுகளை அள்ளிச் சென்ற திரைப்படம்!
2023-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளில் தமிழ் திரையுலகம் பல்வேறு பிரிவுகளில் அங்கீகாரம் பெற்றுள்ளது.
குறிப்பாக, நடிகர் ஹரீஷ் கல்யாண் நடித்த ‘பார்க்கிங்’ திரைப்படம் மூன்று முக்கிய விருதுகளை வென்றுள்ளது. இப்படம் சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த துணை நடிகர் (எம்.எஸ். பாஸ்கர்), மற்றும் சிறந்த திரைக்கதை (இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்) ஆகிய விருதுகளைப் பெற்று தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்த்துள்ளது.
இதேபோல், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், நடிகர் தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படத்தின் இசைக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். இதற்கு முன்பு, சூரரைப் போற்று திரைப்படத்தின் இசைக்காகவும் இவர் தேசிய விருது வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், Non-Feature Films பிரிவில், ‘பகவந்த் கேசரி’ (தெலுங்கு) மற்றும் ‘உள்ளொழுக்கு’ (மலையாளம்) ஆகிய திரைப்படங்களும் சிறந்த படங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் மற்ற பிரிவுகளில், சிறந்த நடிகைக்கான விருதை ‘MRS.CHATTERJEE VS NORWAY’ படத்திற்காக ராணி முகர்ஜி வென்றுள்ளார். சிறந்த துணை நடிகைக்கான விருது ‘உள்ளொழுக்கு’ (மலையாளம்) படத்திற்காக ஊர்வசிக்கும், சிறந்த இயக்குநருக்கான விருது ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்காக சுதிப்தோ சென்னுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை சிறந்த பின்னணி இசைக்கான விருது ‘அனிமல்’ திரைப்படத்திற்காக ஹர்ஷவர்தன் ராமேஷ்வருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் இந்தியத் திரையுலகின் சிறந்த படைப்புகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.