Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

U/A சான்றிதழ் பெற்ற ‘கருடன்’ திரைப்படம் : லேட்டஸ்ட் அப்டேட்!

09:52 PM May 27, 2024 IST | Web Editor
Advertisement

 ‘கருடன்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள திரைப்படம் ‘கருடன்’. இந்த திரைப்படத்தை ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’  உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.  இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் இந்த திரைப்படத்தின் "ஒத்தபட வெறியாட்டம்" பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள் : நீட் தேர்வை மையப்படுத்திய ’அஞ்சாமை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் – நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

இந்நிலையில், தற்போது  ‘கருடன்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags :
GarudanRSDuraiSenthilkumarsasikumarSooriUnniMukundanvetrimaaranYuvanShankarraja
Advertisement
Next Article