Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘லால் சலாம்’ வெற்றியை கொண்டாடிய படக்குழு!

07:38 AM Feb 24, 2024 IST | Jeni
Advertisement

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விக்ராந்த், விஷ்னு விஷால் நடிப்பில் வெளியான ‘லால் சலாம்’ படத்தின் சக்ஸஸ் மீட் நடைபெற்றது. 

Advertisement

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி வெளியான மூன்றாவது படம் லால் சலாம். இந்தப் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும், விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா, விவேக் பிரசன்னா மற்றும் தான்யா பாலகிருஷ்ணா உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் பிப்ரவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் கலவையான விமர்சனங்களைப் பெற்ற ‘லால் சலாம்’ முதல் நாளில் ரூ.3.55 கோடி வசூலித்துள்ளது. ரசிகர்கள் வரவேற்பு அளித்து வரும் நிலையில்,  3வது வாரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.

இதையும் படியுங்கள் : WPL 2024 : கடைசி பந்தில் த்ரில் வெற்றி - டெல்லியை வீழ்த்தி மும்பை அபாரம்!

இந்நிலையில்,  ‘லால் சலாம்’ படத்தின் சக்ஸஸ் மீட் நடந்து முடிந்துள்ளது. இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் இதில் கலந்து கொள்ளவில்லை. சக்ஸஸ் மீட் தொடர்பான புகைப்படத்தை லைகா நிறுவனம் தனது X தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Tags :
#LalSalaamAishwaryaRajinikanthARRahmanCinemaUpdatemovieRajinikanthSuccessMeetteam
Advertisement
Next Article