Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெளிநாட்டில் இறந்த மகளின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நியூஸ் 7 தமிழ் மூலம் தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை!

10:41 AM Dec 23, 2023 IST | Web Editor
Advertisement

சீனாவில்,  இறந்த மகளின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர தமிழ்நாடு முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தந்தை ஒருவர் கண்ணீர் மல்க நியூஸ் 7 தமிழ் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு கேரள எல்லையை ஒட்டி உள்ள தோலடி பகுதியை
சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்- விஜயகுமாரி தம்பதியின் மகள் ரோகிணி நாயர் ( 27).
இவர் சீனாவில் ஜின்சு என்ற நகரத்தில் உள்ள ஜின்சு மருத்துவக் பல்கலைக்கழகத்தில்
மருத்துவ இறுதியாண்டு படித்து வந்தார்.  இந்நிலையில்,  கடந்த 11ஆம் தேதி தன் தாயிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும்,  பிறகு பேசுவதாகவும் கோரி தொலைபேசியை துண்டித்துள்ளார்.

பின் 12 ஆம் தேதி தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக மாணவி வீடியோ கால்
மூலம் தயாரிடம் தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து மாலையில் விஜயகுமாரி தன் மகளுக்கு தொடர்புகொண்டு பேசும் பொழுது, மாணவி உடல்நிலை சரியில்லாமல்
வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.  இந்நிலையில்,
13-ஆம் தேதி ரோகிணி சிகிச்சை பலனின்றி இறந்ததாக அவளுடன் படிக்கும் சக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 18ஆம் தேதி மாணவி படித்த மருத்துவக் பல்கலைக்கழகத்தில் இருந்தும் மாணவி இறந்ததாக மின்னஞ்சல் மூலம் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.  இறந்த மாணவியின் உடலை  ஊருக்கு கொண்டு செல்ல 25 லட்சம் ரூபாய் வரை கட்ட
வேண்டும் என சீன மருத்துவ பல்கலைக்கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.  ஏற்கனவே, ஒரே
மகளின் மருத்துவ கனவை நிறைவேற்றும் பொருட்டு வங்கிகளில் கடன் வாங்கியும்,
வீட்டு கடன் வாங்கியும் மகளை கல்லூரியில் சேர்த்துள்ளனர்.

தற்பொழுது தங்களுடைய மகளின் முகத்தை இறுதியாக பார்க்க ஆசைப்படுவதாகவும்,
அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் எனவும் பெற்றோர் அழுது புலம்பி வருகின்றனர்.  மாணவியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர தமிழ்நாடு முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் தந்தை கண்ணீர் மல்க நியூஸ் 7 தமிழ் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags :
chinaKANNIYAKUMARINews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article