ரஜினிகாந்தின் 173-வது படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்.. வெளியான அப்டேட்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர்கான் உள்ளிடோர் நடித்த ‘கூலி’ திரைப்படம் கடந்த ஆக.14-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரூ.500 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், ரஜினிகாந்தின் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, ரஜினிகாந்தின் 173-வது படத்தை சுந்தர்.சி இயக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிக்கிறது. இப்படம் 2027-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"காற்றாய் மழையாய் நதியாய் பொழிவோம் மகிழ்வோம் வாழ்வோம்! ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் Thalaivar173, Pongal2027" என குறிப்பிட்டுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.