பணப்பெட்டியுடன் வந்த பூர்ணிமாவை வரவேற்ற குடும்பத்தினர்!
பிக்பாஸிலிருந்து, பணப்பெட்டியுடன் வெளியேறிய பூர்ணிமா ரவியை அவரது குடும்பத்தினர் உற்சாகமாக வரவேற்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் பிக்பாஸ் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1-ம் தேதி துவங்கியது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். பின் வைல்கார்ட் என்ட்ரியாக 5 பேர் உள்ளே அனுப்பப்பட்டனர். குறைந்த வாக்குகளை பெறுபவர் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படுவர். இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியின் இறுதி கட்டம் நெருங்கிவரும் நிலையில், முக்கிய போட்டியாளர்கள் எவிக்ட் ஆகி வருகின்றனர்.
மொத்தம் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில், விஷ்ணு, அர்சனா, தினேஷ், மணிசந்திரா, மாயா, பூர்ணிமா, விசித்ரா, விஜய் ஆகிய 8 பேரை தவிர பிற போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்நிலையில், ‘டிக்கெட் டூ பினாலி' டாஸ்கில் வெற்றி பெற்ற விஷ்ணுவை தவிர மற்ற 7 போட்டியாளர்களும் இந்த வார நாமினேஷனில் உள்ளனர்.
வீட்டிற்கு வந்த பூர்ணிமா ரவியை அவரது குடும்பத்தினர் உற்சாகமாக வரவேற்றனர். வெடி வெடித்து, ஆட்டம் பாட்டம், மாலை ஆரத்தி என அவரது குடும்பத்தினர் ஆரவாரம் செய்தனர். வீட்டு வாசலில் பேனர் வைத்து கேக் வெட்டி பூர்ணிமாவுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுத்தனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.