தவெக தலைவர் விஜய் தலைமையில் செயற்குழு கூட்டம் தொடங்கியது!
தமிழக வெற்றிக் கழக செயற்குழு கூட்டம், ஜூலை 4ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் அறிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் செயற்குழு கூட்டம் தொடங்கியது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்பட 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. கூட்டத்தில் தேர்தல் பணிகள், கட்சி மேம்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் 2026 சட்டமன்ற தேர்தல், மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளிடம் கருத்து கேட்க உள்ளார். தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட அளவில் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள், மக்கள் பிரச்சனை ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளன. கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக கட்சியின் கொள்கை பரப்பு தலைவர்களுக்கு கட்சியின் தலைவர் விஜய் மரியாதை செலுத்திய பின் மேடையில் உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.