Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பேருந்துக்காக வெயிலில் காத்திருந்த கர்ப்பிணி - மாவட்ட ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி செயல்!

02:01 PM Dec 27, 2024 IST | Web Editor
Advertisement

காரைக்காலில் பேருந்துக்காக காத்திருந்த நிறை மாத கர்ப்பிணிக்கு லிப்ட்
கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த மாவட்ட ஆட்சியர்

Advertisement

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் நேற்று பட்டினச்சேரி
மீனவ கிராமத்தில் நடைபெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க தனது
காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரைக்காலில் மருத்துவமனை அருகில் உள்ள
பேருந்து நிறுத்தத்தில் கடும் வெயிலில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பேருந்துக்காக காத்திருப்பதை கண்டார். உடனடியாக தனது காரை நிறுத்திய ஆட்சியர்
மணிகண்டன் நிறைமாத கர்ப்பிணியிடம் எங்கு செல்ல வேண்டும் என விசாரித்தார்.
அப்போது அவர்கள் நிரவி அடுத்த நடுக்கலாம் பேட் கிராமத்து பகுதியை சேர்ந்த நவோத
மேரி எனவும் அரசு மருத்துவமனையில் மாதந்திர மருத்துவ பரிசோதனை செய்துவிட்டு,
பேருந்திற்காக காத்திருப்பதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார்.

கர்ப்பிணியிடம் அவரது வீட்டில் தனது காரில் இறக்கி விடுவதாக கர்ப்பிணியும்
உடன் வந்தவரையும் ஏற்றி சென்று பத்திரமாக நவோதா மேரி வீட்டில் ஆட்சியர் இறக்கி
விட்டார். காரில் பயணித்த பொழுது ஆட்சியர் கர்ப்பிணி பெண்ணிடம் நலம்
குறித்தும், குடும்பங்கள் விஷயத்தையும் இயல்பாக பேசியது அப்பெண்ணுக்கு
மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளை நல்லா படிக்க
வைக்க வேண்டும் என்று அறிவுறுத்திய ஆட்சியர் மணிகண்டன் நவோதா மேரி வீட்டிற்கு
சென்று அவரின் மகப்பேறு மருத்துவ அட்டைகளை பார்வையிட்டதுடன்,குடும்ப பின்னணி
பொருளாதரநிலை மற்றும் வேலை வாய்ப்பு குறித்து முழு விவரங்கள் கேட்டறிந்தார்.

மகப்பேறு காலங்களில் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமான உணவு பொருட்களை எடுத்துக்
கொள்ளுமாறும் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளை செய்து ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்குமாறும் பெண்மணி நவோதா மேரிக்கு கலெக்டர் மணிகண்டன்
அறிவுறுத்தினார். பேருந்திற்காக காத்திருந்த கர்ப்பிணி பெண்ணிற்கு லிப்ட் கொடுத்த ஆட்சியர்
மணிகண்டனுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து
வருகின்றன.

Tags :
CollectorkaraikalNews7 Tamil UpdatesNews7TamilPregnant
Advertisement
Next Article