போலி டாக்டர் பட்டம்: ‘மை வி 3 ஆட்ஸின்’ விநியோகர் கைது!
மை வி3 ஆட்ஸ் நிறுவனத்திற்கு ஹெர்பல் ப்ராடக்டுகளை விநியோகம் செய்து வரும் விஜயராகவன் போலி டாக்டர் பட்டம் பெற்றதாக கோவை மாநகர குற்றபிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை வெள்ள கிணறு பகுதியில் செயல்பட்டு வரும் சக்தி ஆனந்தின் மை வி3 ஆட்ஸ் நிறுவனத்தில் ஹெர்பல் ப்ராடக்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை வாங்கும் நுகர்வோர்கள் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை கடந்து, ஃபாலோவர்களாக மாறுகின்றனர். அவர்கள் அந்த நிறுவனத்தின் விளம்பரங்களை பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் என மை வி3 ஆப்ஸ் நிறுவனத்தார் தெரிவிக்க, 50 லட்சம் பேர் இந்த நிறுவனத்தை பின்தொடர்கின்றனர்.
போலீசார் நடத்தி வரும் விசாரணையில், மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தாருக்கு சித்துவா ஹெர்பல் தயாரிப்பு நிறுவனத்தினர் ஹெர்பல் ப்ராடக்டுகளை விநியோகம் செய்து வருவது தெரியவந்தது. 80-க்கும் ப்ராடக்டுகளை மை வீ3 ஏட்ஸ் நிறுவனத்துக்கு தயாரித்து தந்திருக்கின்றனர். இதுகுறித்து நடந்திய விசாரணையின் போது, அதன் உரிமையாளர் விஜயராகவன் நேச்சுரோபதியில் பிஎச்டி பட்டம் பெற்றதாக தெரிவித்து சான்றிதழ்களை தந்திருக்கின்றார்.
பின்னர் கோவை அழைத்துவரப்பட்ட விஜயராகவனிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.