Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தனுஷ், நயன்தாரா இடையிலான கருத்து வேறுபாடு சுவராஸ்யமாக இருக்கிறது” - நடிகர்  #Parthiban பேட்டி!

04:01 PM Nov 26, 2024 IST | Web Editor
Advertisement

“நயன்தாரா, தனுஷ் இடையிலான கருத்து வேறுபாடு சுவராஸ்யமாக இருக்கிறது” என நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Advertisement

புதுச்சேரியில் கொரோனாவிற்கு பிறகு படப்பிடிப்பு கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. படப்பிடிப்புக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என திரைத்துறையை சார்ந்தவர்கள் தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வலியுறுத்தி வந்தனர். தொடர் கோரிக்கைகளை அடுத்து, தற்போது படப்பிடிப்பு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;

கொரோனா காலத்தின் போது, புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், அதனை தற்போது குறைத்துள்ள முதலமைச்சர் ரங்கசாமிக்கு வாழ்த்துக்களையும், நன்றியும் தெரிவித்தேன். இந்த கட்டணம் இன்னமும் குறைக்கப்பட்டால் புதுச்சேரியில் சுற்றுலா மேம்படும். நிறைய படப்பிடிப்பு நடைபெறும். உலகில் மிக அழகான கடற்கரை நகரங்களில் புதுச்சேரியும் ஒன்று.

இந்த ஆண்டு விவாகரத்து வருடம் போல. அதனால் தான் நிறைய விவாகரத்து செய்திகள் வந்துள்ளது. நான் ஏஆர். ரகுமான் சாருடன் கிட்டத்தட்ட 22 ஆண்டு காலங்களாக பழகியுள்ளேன். அவர் மிகவும் தூய்மையானவர். அவரை போல ஒரு சிறந்த மனிதர் உலகிலேயே கிடைக்க மாட்டார். அதனால் தான் விவாகரத்து அறிவித்த அவரது மனைவியே அவரைப் பற்றி யாரும் தவறாக பேச வேண்டாம் என கூறியுள்ளார். அவர்கள் விவாகரத்து விஷயத்தில் நாம் தலையிட்டு இருக்கக் கூடாது. அவசரப்பட்டு கருத்து கூறிவிட்டோமோ என தோன்றுகிறது.

விஜய்யின் அரசியலை தவிர்க்க முடியாத ஒரு அரசியலாக நான் பார்க்கிறேன். ரஜினி, கமல் அரசியலுக்கு வரும்போது கூட, இவர்கள் வந்து என்ன செய்து விடுவார்கள் என விமர்சனங்கள் இருந்தது. அதுபோல விமர்சனங்கள் தான் தற்போது விஜய்க்கும் உள்ளது. ஆனால் அவருடைய எழுச்சி என்பது மிகவும் பிரமாதமாக உள்ளது. அவர் அடுத்த அடுத்த நல்ல முன்னேற்றங்களை அடைவார்.

விஜய் திமுகவை எதிர்ப்பது தான் சரியான விஷயம். அரசியல் என்றால் இன்று யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களை எதிர்ப்பது தான். கடந்த காலங்களில் எம்ஜிஆரும் அதைத்தான் செய்தார். எனக்கும் அரசியலில் பயங்கர ஈடுபாடு உள்ளது. நானும் ஒரு நாள் கட்சி ஆரம்பிப்பேன். என் அரசியல் யாரையும் சார்ந்து இருக்காது. புதிய பாதை தொடங்கி என்னுடைய அனைத்து படங்களிலும் அரசியல் உள்ளது. எனக்கும் அரசியல் விருப்பம் உள்ளது. ஆனால் அது இப்போது இல்லை.

இன்று சமூகத்தில் பெண்களுக்கு நிறைய பாதுகாப்பு உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு தேவை பாதுகாப்பு தேவை என கூறி நாம் தான் அவர்களை பலவீனம் ஆக்கி விடுகிறோமோ எனத் தோன்றுகிறது. ஒரு ஆணை விட பெண்தான் வலிமையானவர். நயன்தாரா, தனுஷ் இடையிலான கருத்து வேறுபாடு சுவராஸ்யமாக இருக்கிறது. ஒரு பக்கம் தனுஷ் ஒரு பக்கம் நயன்தாரா. இதில் திருமணம் ஒன்றிக்கு வந்த அவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் அமர்ந்திருந்தது பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. நாம் பார்வையாளர்கள். அதனால் இரு தரப்பையும் நான் ரசிக்கிறேன்” என தெரிவித்தார்.

Tags :
actorsDhanushnayantharaParthibanpuducherry CMRangaswamy
Advertisement
Next Article