Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இளையராஜாவை சந்தித்த #LubberPandhu படக்குழு!

03:34 PM Oct 01, 2024 IST | Web Editor
Advertisement

லப்பர் பந்து படக்குழுவினர் இளையராஜாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Advertisement

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த ‘லப்பர் பந்து’ திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

’லப்பர் பந்து’ திரைப்படம் செப்டம்பர் 20ம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை மக்கள் கொண்டாடி வரும் இந்த நிலையில், உலகளவில் லப்பர் பந்து திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் 10 நாட்களில் உலகளவில் ரூ. 18 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள் :மேற்கு வங்கம் | பணமோசடி விவகாரம் – #parthachatterjee ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

ரசிகர்களைத் தாண்டி இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோரும் பாராட்டியிருந்தனர். இந்நிலையில், நடிகர் விஜயகாந்தின் பொன்மனச் செல்வன் திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த, ‘நீ பொட்டு வச்ச தங்கக் குடம்’ பாடலை அட்டகத்தி தினேஷ் காட்சிகளுக்குப் பயன்படுத்தியிருந்தனர். படத்திற்கான விமர்சனங்களில் அப்பாடல் முக்கிய பங்கு வகித்திருந்தது. இதனால், நடிகர்கள் தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்பட லப்பர் பந்து படக்குழுவினர் இளையராஜாவை இன்று நேரில் சந்தித்து தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

Tags :
IlayarajaLubberPandhuNews7Tamilnews7TamilUpdatesTamilCinemaVarunChakaravarthy
Advertisement
Next Article