Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சாலையோரம் கிடந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தம்பதி... குவியும் பாராட்டு!

10:26 AM Feb 17, 2024 IST | Web Editor
Advertisement

சாலையோரம் கிடந்த தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Advertisement

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பகுதியைச் சேர்ந்தவர் குமார்.  இவர் அப்பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.  இந்த நிலையில் பிப்.15-ம் தேதி இரவு 9 மணி அளவில் குமார் மற்றும் அவரது மனைவி கற்பகவல்லி ஆய்க்குடி, மாயாண்டி கோயில் அருகே உள்ள கடைக்குச் சென்று வீடு திரும்புயுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,  அவர்கள் செல்லும் வழியில் சுமார் ரூ.2,50,000  மதிப்பிலான 5 சவரன் தங்க சங்கிலி சாலையோரம் கிடந்துள்ளது.  அவர்கள் இருவரும்,  அந்த சங்கிலியை எடுத்து உரிய முறையில் ஆய்க்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படியுங்கள்: இப்படிதான் சாக்லேட் குச்சி ஐஸ் செய்றாங்களா? – இணையத்தில் வீடியோ வைரல்!

குமார் மற்றும் கற்பகவல்லி தம்பதியினரின் இச்செயலை பாராட்டி,  தென்காசி மாவட்ட காவல்துறையின் சார்பாக ஆய்க்குடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஹரிஹரன் அவருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

Tags :
AaikudicoupleGoldgold chainTenkasiTN Police
Advertisement
Next Article