Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதி எது? இன்று வெளியாகிறது அறிவிப்பு!

10:46 AM Mar 14, 2024 IST | Web Editor
Advertisement

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக போட்டியிடும் தொகுதி பற்றிய விவரம் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Advertisement

திமுக கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில்,  காங்கிரஸ் மற்றும் மதிமுக தவிர,  மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதும் இறுதி செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்நிலையில்,  மதிமுக போட்டியிடும் தொகுதி அடையாளம் காணாமல் உள்ள நிலையில், இன்று தொகுதி அடையாளம் காணப்பட்டு,  ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை 11:00 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் மதிமுக தேர்தல் குழுவினர்,  திமுக தேர்தல் குழுவினரை சந்திக்க உள்ளனர்.

அப்போது,  மதிமுக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், திருச்சி தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags :
DMK AllianceElections2024Lok sabha Election 2024MDMK
Advertisement
Next Article