விமரிசையாக நடைபெற்ற முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்!
ஈரோடு மாவட்டம் பவானி அருகே முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது .
ஈரோடு மாவட்டம் பவானி அருகே ராமன் பாலக்காடு பகுதியில் அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது . கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வந்த கோயில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இன்று கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனையும் படியுங்கள் : பட்டினப்பாக்கம் | #Sunshade இடிந்து இளைஞர் உயிரிழப்பு - ரூ.5லட்சம் நிவாரணம் அறிவித்த தமிழ்நாடு அரசு!
முன்னதாக நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்ற பின் சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி வந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினர் . இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அப்பகுதியில் உள்ள ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .