Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நான் ஒரு பெரிய ஆள் என்னும் கர்வம் எப்போதோ என்னிடம் இருந்து அழிந்து விட்டது!” - இசையமைப்பாளர் இளையராஜா

10:21 PM Jan 04, 2024 IST | Web Editor
Advertisement

நான் ஒரு பெரிய ஆள் என்னும் கர்வம் எப்போதோ என்னிடம் இருந்து அழிந்து விட்டது என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

Advertisement

'மால்யாடா ' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இளையராஜா கூறியதாவது:

ஆண்டாளை பற்றி தெரிந்த கொள்ள வந்தேன். எனக்கு தமிழ் இலக்கிய அறிவும், மொழி அறிவும் கிடையாது. எனக்கு தெரிந்தது எது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். நான் முதன் முதலாக கிராமத்திலிருந்து வந்து இசைப்பணியை தொடங்கிய போது, பின்னணி இசை கோர்க்கும் பணியில் ஈடுபட்டேன். அப்போது, ஆண்டாள் பாட்டுக்கு இசை அமைக்கும் சூழல் ஏற்பட்டது. இதன் வாயிலாக முதல் திரைப்படத்திலேயே ஆண்டாள் அருள் எனக்கு கிடைத்தது. நான் சிவ பக்தன். ஆனால் நான் ஆண்டாள் வழிபாட்டுக்கெல்லாம் எதிரி இல்லை. எனக்கு அப்பா வைத்த பெயர் ஞானதேசிகன். சின்னதாக இருக்க வேண்டும் என்பதற்காக பள்ளியில் ராஜய்யா என்று பெயர் வைக்கப்பட்டது. அது ராஜா-வாக மாறி பின்னர் இளையராஜாவாக மாறிவிட்டது.

திருவாசகத்துக்கு இசையமைத்தது போல், திவ்ய பிரபந்தத்திற்கும் ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறேன். சரியான சந்தர்ப்பத்தில் அதை வெளியிட காத்திருக்கிறேன். முன்னெல்லாம் காலையில் ஒரு பாடல் மாலையில் ஒரு பாடல் ரெக்காட் செய்வோம். தற்போது 6 மாதம், ஒரு வருடமெல்லாம் ஒரு பாடலுக்கு இசையமைக்க நேரம் எடுத்துக்கொள்பவர்களெல்லாம் இருக்கிறார்கள். கர்நாடக இசை பற்றி ஒன்றும் எனக்கு தெரியாது. என்னை ஏன் இசைஞானி என்கிறார்கள். அதுவும் கேள்வி குறிதான். நான் ஒரு பெரிய ஆள் என்னும் கர்வம் எப்போதோ என்னிடம் இருந்து அழிந்து விட்டது.

தீபாவளி நாட்களில் திரைப்படங்களை அவசரமாக வெளியிட வேண்டி வரும் போது 3 நாட்களில் 3 திரைப்படங்களுக்கு இசையமைத்து தந்துள்ளேன். இதுவரை யாரும் அப்படி பின்னணி இசை அமைத்து கொடுத்ததில்லை. அப்படி ஓய்வில்லாமல் உழைக்கும் போது, பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வேன். திருவண்ணாமலையில் ஒவ்வொரு பௌர்ணமியிலும் கிரிவலம் செல்லும் போது 20 வருடங்களுக்கு மேலாக காட்டு வழிப்பாதையிலே செல்லுவேன். அதுவும் வெறும் காலிலே செல்வேன்.

இந்த விழாவிற்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத ஆளாக நான் இங்கு வந்து உட்கார்ந்துள்ளேன். இந்த புத்தகத்தின் ஆசிரியர் ஜெயசுந்தர் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.

Tags :
book releaseChennaiIlaiyaraajanews7 tamilNews7 Tamil UpdatesTamilNadu
Advertisement
Next Article