பெரு வெள்ளத்தின் கோரம் | புன்னைக்காயல் கிராமம் மீள்வது எப்போது? | களத்தில் நியூஸ் 7 தமிழ்!
தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் மீனவ கிராமத்தில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் இன்றி அவர்கள் தவித்து வருவதாக நியூஸ்7 தமிழ் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை, வெள்ளம் காரணமாக லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் மீனவ கிராமத்தில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தாமிரபரணி வெள்ள நீர் புன்னக்காயல் பகுதியில் சென்று கடலில் கலக்கும் நிலை அங்கு உள்ளது. இதன்காரணமாக, அதிகப்படியான வெள்ளம் அவ்வழியே செல்வதால், புன்னக்காயல் மீனவ கிராமம் தனித்தீவு போல துண்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 8 கிமீட்டர் தூரம் கடல் வழியாப பயணம் செய்து புன்னைகாயல் மக்களின் துயரத்தை பதிவு செய்தது நியூஸ் 7 தமிழ் குழு .
உணவு, தண்ணீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இன்றி அவர்கள் தவித்து வருவதாகவும், அரசு சார்பில் எந்த உதவியும் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டிய அவர்கள் தங்களுக்கான உதவிகளை கோரி நியூஸ்7 தமிழ் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.