Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'டங்ஸ்டன் விவகாரத்தில் முதலமைச்சரின் நிலைப்பாடு பாராட்டத்தக்கது' - கமல்ஹாசன் ட்வீட் !

07:46 AM Dec 11, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சரின் உறுதி கொண்ட நெஞ்சத்தை மனமாரப் பாராட்டுவதாக நடிகரும் ம.நீ.ம.கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement

நடிகரும், ம.நீ.ம.கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், மக்களின் விருப்பத்துக்கு மாறாக அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையக் கூடாது என்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெஞ்சுரத்தோடு எடுத்திருக்கும் உறுதியான நிலைப்பாடு பாராட்டத்தக்கது.

'நான் முதலமைச்சராக இருக்கும் வரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது' என்று முதலமைச்சர் சட்டசபையில் பேசியிருப்பது மக்கள் மீதான அவரது அக்கறையையும் இயற்கை காக்கப்பட வேண்டும் என்பதில் அவருக்கு இருக்கும் ஈடுபாட்டையும் தெளிவுபடக் காட்டுகிறது. மக்கள் பிரச்னையை நெஞ்சுக்கு நெருக்கமாக அணுகும் முதலமைச்சரின் உறுதி கொண்ட நெஞ்சத்தை மனமாரப் பாராட்டுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

Tags :
CHIEF MINISTERKamalhaasanMKStalintungstentweet
Advertisement
Next Article