அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
செங்கல்பட்டு மாவட்டத்தில் தலைமை மருத்துவமனை தாம்பரம் சானடோரியத்தில் 115 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை, 7 கோடியில் சிறப்பு பல்நோக்கு பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, 1 கோடியில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார ஆய்வகம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தரைத் தளம் மற்றும் ஆறு தளங்களுடன் 400 படுக்கை வசதி கொண்ட இந்த மருத்துவமனையில் ஆறு அறுவை சகிச்சை அரங்குகள், சி.டி.,ஸ்கேன், குழந்தைகள் நலன், புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை, பச்சிளம் குழந்தை பிரிவு, நீரிழிவு பிரிவு ஆகிய சிறப்பு வசதிகள் அமைந்துள்ளது.
தாம்பரத்தில் புதியதாக திறக்கப்பட்ட பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 6 மருத்துவர்கள் கொண்ட பல் மருத்துவமனையில் சிறிய சிகிச்சைகள் முதல் ஈறு நோய் வரை அனைத்து சிகிச்சைகள், சிறு அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கு பல் சிகிச்சை, பல் மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை வழங்கப்பட உள்ளது.
இதனிடையே முதலமைச்சர் முக.ஸ்டாலின் புதிய மருத்துவமனையில் கல்வெட்டை திறந்து வைத்தார். விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, குறு-சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.