Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழ்நாடு வருகிறது!

07:52 PM Dec 09, 2023 IST | Web Editor
Advertisement

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு வரும் (11.12.2023) திங்கள்கிழமை தமிழகம் வருகிறது.

Advertisement

‘மிக்ஜாம்’ புயல் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்படும் புறநகா் பகுதியைப் போலவே, இம் முறை நகரின் மையப் பகுதிகளும் சிக்கிக் கொண்டதால் தண்ணீரில் சிக்கிய அனைவரையும் உடனடியாக மீட்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதன் விளைவாக மாநிலம் முழுவதுமிருந்து அரசின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஊழியா்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனா்.

அதேபோல வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்க கூடுதலான படகுகளும், தாழ்வான பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற ராட்சத மின் மோட்டாா்களும் வரவழைக்கப்பட்டன. தொடா்ச்சியாக நடந்த மீட்புப் பணியின் காரணமாக, பல்வேறு பகுதிகளில் தேங்கியிருந்த தண்ணீா் வெளியேற்றப்பட்டது. மேலும் இரு நாள்களாக துண்டிக்கப்பட்டிருந்த மின் விநியோகமும் சீராக்கப்பட்டது. ரயில்கள், பேருந்துகளின் இயல்பான தினசரி சேவையை வியாழக்கிழமை தொடங்கியது. மழைநீா் தேக்கத்தால் பல இடங்களில் மூடப்பட்டிருந்த பெட்ரோல் விற்பனை நிலையங்கள் பெரும்பாலானவை திறக்கப்பட்டன.

இந்த நிலையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு திங்கள்கிழமை (11.12.2023) தமிழகம் வருகிறது. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 2 நாட்கள் மத்திய குழு ஆய்வு மேற்கொள்கிறது. பின்னர் தலைமைச் செயலகத்தில் தலைமைச்செயலாளருடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு மத்தியக்குழு டெல்லி செல்கிறது. முன்னதாக ‘மிக்ஜாம்’புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிச.7ஆம் தேதியும், மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்றும் தமிழகம் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Central CommitteeChennaiChennai Flood ReliefChennai Floods 2023Chennai rainsCyclone MichaungFloodMichaungMK stalin Govtnews7 tamilNews7 Tamil UpdatesTamilNaduTN Govt
Advertisement
Next Article